முதல்வர் ஓ.பி.எஸ். காருக்கு வழிவிட்ட மு.க.ஸ்டாலின் பெருந்தன்மை!

சென்னை,

முதல்வருக்கு வழிவிட்டு கடற்கரை சாலையில் ஒதுங்கி நின்றார் மு.க.ஸ்டாலின். இது அவரது பெருந்தன்மையை காட்டுவதாக இருந்தது.

இன்று காலை வழக்கம்போல தலைமை செயலகம் நோக்கி வந்தார் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம். அதே வேளையில் தமிழக எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலினின் காரும் தலைமை செயலகம் நோக்கி வந்தது.

அவரது கார்  தீவுத்திடல்   அருகே உள்ள போர் நினைவு சின்னம் ரவுண்டானாவில் வந்து கொண்டிருந்தது. அப்போது, முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் கான்வாய் பின்னால் வந்துள்ளது.

முதல்வரின் கான்வாய் வருவதை உணர்ந்த ஸ்டாலின் டிரைவரிடம் வண்டியை ஓரமாக நிறுத்தச் சொல்லி முதல்வருக்கு வழிவிட்டார்.

இதை பார்த்துக்கொண்டிருந்த  அந்த பகுதியில் இருந்த பொதுமக்களிடையேயும், காவலர்களிட மும் ஸ்டாலினின் செயல்  வியப்பை ஏற்படுத்தியது. ஸ்டாலின் பெருந்தன்மை குறித்து வியந்தனர்.