சென்னை:

த்தியஅரசு கொண்டுவந்துள்ள புதிய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக திமுக தலைமையில் வரும் 23ந்தேதி மாபெரும் கண்டனப் பேரணி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும்படி நடிகர்கள் சங்கத்துக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.

குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து, வரும் 23ம் தேதி, சென்னையில் திமுக கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன பேரணி நடைபெற உள்ளது. இந்த பேரணியில், அரசியல் கட்சிகள், விவசாயிகள், வணிகர், மாணவர்கள், திரைத்துறையினர், தொழிற்சங்கங்கள் பொதுமக்கள் உள்பட அனைத்துத் தரப்பினரும் கலந்துகொள்ள உள்ளனர்.

இந்த மாபெரும் கண்டனப் பேரணியில், நடிகர்கள் ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்டோர் உறுப்பினர் களாக இருக்கும் தென்னிந்திய நடிகர் சங்கமும் கலந்துகொள்ள வேண்டும், தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு,  திமுக தலைவர் ஸ்டாலின் அழைப்பு கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில், சாதி, மதம், மாநில பாகுபாடுகள் கடந்து இப்போராட்டத்தை முன்னெடுப்பதன் மூலமாக இச்சட்டத்தை திரும்பப் பெற வைக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார். அதுபோல,   திரைப்பட இயக்குனர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்ககத்துக்கும் ஸ்டாலின் கலந்துகொள்ள வலியுறுத்தி கடிதம் அனுப்பி உள்ளார்.

மத்தியஅரசு அமல்படுத்தி உள்ள குயுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக, பேரணியில் பங்கேற்று ஜனநாயகத்தின் குரலை எழுப்புவோம் என்று திமுகத் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.