நாளை காலை ஆளுநரை சந்திக்கிறார் ஸ்டாலின்

சென்னை:
திமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்வாகியுள்ள மு.க.ஸ்டாலின் நாளை காலை ஆளுநரை சந்திக்கிறார்.

காலை 10 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஷித்தை சந்திக்கும் அவர் திமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்வான கடிதத்தை வழங்கி தமிழகத்தில் ஆட்சியமைக்கவும் உரிமைகோருகிறார்.

அத்துடன் தமிழக அமைச்சரவை பட்டியலையும் ஆளுநரிடம் அவர் வழங்குகிறார். அதைத்தொடர்ந்து, 7ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்கிறார்.