சென்னை:

திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பதவியேற்று ஓராண்டு நிறைவுபெற்றுள்ள நிலையில், அவருக்கு திமுக முன்னணியினர், அரசியல் கட்சித்தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குன்றியதைத் தொடர்ந்து, திமுகவின் செயல்தலைவராக ஸ்டாலின் அறிவிக்கப்பட்ட நிலையில், கருணாநிதி மறைவுக்கு பிறகு  கூடிய திமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுவில், திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப் பட்டார்.

கடந்த ஆண்டு (2018) ஆகஸ்டு 28ந்தேதி அன்று திமுக தலைமையகம் அண்ணா அறிவாலயத் தில் நடைபெற்ற திமுக பொதுக்குழுவில்  திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக பொதுச்செயலாளர் அன்பழகன்  அறிவித்தார்.

சுமார் 50 ஆண்டுகளாக திமுகவுக்கு கருணாநிதியே தலைவராக இருந்து வந்த நிலையில், அவரது மறைவுக்கு பிறகு, ஸ்டாலின் அந்த பெற்றார்.

இந்த நிலையில், அவர் திமுக தலைவராக பதவி ஏற்று ஒரு ஆண்டு ஆன நிலையில், அவருக்கு கட்சியின் மூத்த நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.