சென்னை: கொரோனா மரணங்கள் தவிர அரசின் அலட்சிய மரணங்களும் அதிகரித்து, மக்களைக் கொல்லும்  அரசாக மாறிவிட்டது என்று பதிவிட்டுள்ளார்.

திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் இன்று ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் முருகானந்தபுரத்தைச் சேர்ந்த யசோதா, வெங்கடேஸ்புரத்தைச் சேர்ந்த கௌரவன் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந் நிலையில், திருப்பூரில் நோயாளிகள் மறைவே, முதலமைச்சர் பழனிசாமி ஆட்சியின் லட்சணத்தை காட்டுகிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறி உள்ளார்.

இருவர் மரணம் தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: திருப்பூர் அரசு மருத்துவமனை ICU-வில் ஆக்சிஜன் தடைப்பட்டு இருவர்  உயிரிழந்திருக்கிறார்கள். மருத்துவமனையை நம்பியவர்களின் கொடூர மரணங்கள் இவை!.

முதல்வர் பழனிசாமி ஆட்சியின் இலட்சணம் இது!. கொரோனா மரணங்கள் தவிர அரசின் அலட்சிய மரணங்களும் அதிகரித்து, மக்களைக் கொல்லும்  அரசாக மாறிவிட்டது என்று பதிவிட்டுள்ளார்.