திமுகவை தோற்கடிக்கவே சிலரை கட்டாயப்படுத்தி கட்சி தொடங்க வைக்கின்றனர்: நிர்வாகிகள் மத்தியில் ஸ்டாலின் பேச்சு

சென்னை: திமுகவை தோற்கடிப்பதற்காகவே சிலரை கட்டாயப்படுத்தி கட்சி தொடங்க வைக்கின்றனர் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில், கட்சி நிர்வாகிகளுடனான அவர் கலந்துரையாடினார். கூட்டத்தில் ஸ்டாலின் கூறியதாவது: 117 தொகுதிகளில் வெற்றி பெற்றால் போதும், ஆனால் அதற்காக நாம் கட்சி நடத்தவில்லை. திமுகவை தோற்கடிக்க சிலரை கட்டாயப்படுத்தி கட்சி தொடங்க வைக்கின்றனர்.

முக்கியமான காலக்கட்டத்தில் ஆலோசனை கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறோம். திமுக சார்பில் 16,000 கிராம சபைக் கூட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. திமுக ஆட்சி மலர வேண்டும் என்பதே லட்சியமாக இருக்க வேண்டும்.

ஒவ்வொரு தொகுதியிலும் உதயசூரியனின் வேட்பாளர்கள் கருணாநிதியின் வேட்பாளர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தமிழகத்தில் திமுக வெற்றி பெறும், ஆனால் அந்த வெற்றியை எளிதில் பெற விட மாட்டார்கள். தேர்தலில் அதிமுக அமைச்சர்கள் அனைவரும் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.