விளம்பரத்திற்காக குளத்தை தூர்வாருகிறார் ஸ்டாலின்! ஒபிஎஸ் மணியன் குற்றச்சாட்டு

சென்னை,

மிழகத்தில் தண்ணீர் தேவையை கருத்தில்கொண்டு, குளங்களை தூர்வாரும் பணியை திமுகவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இது தமிழகம் முழுவதும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் காரணமாக தமிழக அரசு மற்றும் அமைச்சர்கள் திமுகமீது கடும் கோபத்தில் உள்ளனர்.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தமிழக அமைச்சர் ஓபிஎஸ் மணியன், விளம்பரத்திற் காக குளத்தை தூர்வாரும் பணியில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ஈடுபடுகிறார் என்று குற்றம் சாட்டினார்.

தமிழகம் முழுவதும் நீர் பற்றாக்குறையை சமாளிக்க நீ ர்நிலைகளை மேம்படுத்தும் வகையில் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென திமுகவினருக்கு திமுக தலைமை ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

அதைத்தொடர்ந்து தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் உள்ள குளங்கள், கோவில் குளங்கள், ஏரிகளை திமுகவினர் தூர் வாரி வருகின்றனர்.

திமுகவின் சமுதாயப்பணிக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலை யில், சேலம் அருகே முதல்வர் தொகுதியான எடப்பாடி தொகுதியில் உள்ள குளம் திமுகவினரால் தூர் வாரப்பட்டது.

இது இரு கட்சிகளுக்கும் இடையே மோதலை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், தமிழக அமைச்சர் ஓபிஎஸ் மணியன், விளம்பரத்திற்காக திமுக குளங்களை தூர் வாரி வருவதாக ஸ்டாலின்மீது குற்றம் சாட்டி உள்ளார்.

You may have missed