சென்னை: திமுக பொதுச்செயலாளர் அன்பழகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று முக ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனுக்கு வயது 97. வயது முதிர்வு காரணமாக வீட்டில் சிகிச்சை பெற்று வந்த அவர் உடல்நிலை மோசமானதால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. தொடர்ந்து செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.

இந் நிலையில் மருத்துவமனைக்கு சென்ற திமுக தலைவர் முக ஸ்டாலின், அன்பழகனின் உடல்நிலை பற்றி மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார்.

அப்போது ஸ்டாலின் கூறியதாவது: திமுக பொதுச்செயலாளர் அன்பழகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வயது முதிர்வின் காரணமாக மருத்துவ சிகிச்சைக்கு அன்பழகனின் உடல் ஒத்துழைக்க வில்லை. தொடர்ந்து மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார்  என்றார்.