உத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழாவில் பங்கேற்பு: மும்பை சென்றடைந்தார் ஸ்டாலின்

மும்பை:

காராஷ்டிரா மாநில முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழாவில் பங்கேற்கும் வகையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மும்பை சென்றடைந்தார். இன்று மாலை நடைபெற உள்ள பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க உள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில், சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணியான மகா விகாஸ் அகாதி சார்பில் முதல்வராக உத்தவ் தாக்கரே தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதைத்தொடர்ந்து, இன்று மாலை அவர் முதல்வராக பதவி ஏற்கும் விழா, தாதரில் உள்ள சிவாஜி பூங்காவிலநடைபெற உள்ளது.

இந்த பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ள நாடு முழுவதும் இருந்து பல்வேறு கட்சித் தலைவர்கள் மும்பையில் குவிந்து வரும் நிலையில்,  ‘திமுக தலைவர் ஸ்டாலினும்,, மகாராஷ்டிர மாநில முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்கும் விழாவில் பங்கேற்க மும்பை சென்றடைந்துள்ளார்.