8 வழிச்சாலை: மார்க்சிஸ்டு கட்சி போராட்டத்துக்கு ஸ்டாலின் வாழ்த்து

சென்னை:

சென்னை சேலம் இடையே அமைய உள்ள 7வழி பசுமை விரைவுவழிச் சாலைக்கு எதிராக மார்க்சிஸ்டு கட்சி நடத்தும் போராட்டத்துக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துதெரிவித்து  உள்ளார்.

சேலம் – சென்னை இடையே 8 வழிச்சாலை திட்டத்தை அமைக்க மத்திய மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த சாலை அமைய உள்ள மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள், சாலைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்களை காவல்துறை உதவியுடன் தமிழகஅரசு மிரட்டியும், கைது செய்து சிறையில் அடைத்தும் வருகிறது.

இந்த நிலையில் 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து,   ‘என் நிலம், என் உரிமை’ என்ற பெயரில் திருவண்ணாமலையில் இருந்து சேலம் வரை  இன்று  நடைபயணம் மேற்கொள்ளப்படும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

மார்க்சிஸ்டு கட்சியின் போராட்டத்துக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனாலும், தடையை மீறி நடைபயண போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் மார்க்சிஸ்டு கட்சி நடத்தும் போராட்டத்துக்கு ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது,

“சேலம் எட்டு வழி பசுமை சாலை திட்டத்தை எதிர்த்து மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் நடைபயணத்திற்கு தடை விதிப்பது ஜனநாயக விரோதம். தடையையும் மீறி அவர்கள் செல்வதை வரவேற்பதோடு திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் அவர்கள் போராட்டம் வெற்றி அடைய வாழ்த்துகிறேன்!”

இவ்வாறு ஸ்டாலின் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 8 வழிச்சாலை: மார்க்சிஸ்டு கட்சி போராட்டத்துக்கு ஸ்டாலின் வாழ்த்து, Stalin greet the Marxist party protest against chennai salem 8 way road
-=-