திமுக தலைவர் ஸ்டாலினுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வாழ்த்து

சென்னை:

இன்று நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதாக திமுக பொதுச்செயலாளர் அன்பழகனால் அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவருக்கு நாடு முழுவதும் இருந்து தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டது குறித்த செய்தி அறிந்ததும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிட்டு தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

ராகுல் பதிவிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,  தி.மு.க. தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் எம்.கே. ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள். அவர் தனது அரசியல் பயணத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்குகையில் அவர் மகிழ்ச்சியையும் வெற்றியும் பெற விரும்புகிறேன் என்று வாழ்த்தி உள்ளார்.