காஞ்சிபுரம்: மத்தியஅரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் தோழமை கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. காஞ்சியில் நடைபெற்ற போராட்டத்தற்கு சென்ற ஸ்டாலின்,  அந்தப்பகுதியில் உள்ள வயக்காட்டில்,  பச்சைத்துண்டுடன் விவசாய நிலத்தில் இறங்கி விவசாயிகளுடன் பேசினார்.

காஞ்சிபுரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் பிரமாண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை வடக்கில் கே.எஸ்.அழகிரி, சென்னை தெற்கில் வைகோ, கடலூரில் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்று போராட்டத்தை நடத்தினர். 

மத்தியஅரசு, விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களை பாதிக்கும் வகையில் 3 மசோதாக்களை நிறைவேற்றி உள்ளது.  இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. வட மாநிலங்களில் விவசாயிகள் ரயில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மத்திய பா.ஜ.க அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்தும் திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தியும் இதற்கு துணைபோன ஆளும் அ.தி.மு.க அரசைக் கண்த்தும் இன்று தமிழகம் முழுவதும் தி.மு.க தலைமையில் தோழமைக் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம்  இன்று நடைபெற்று வருகிறது.

காஞ்சிபுரம் காஞ்சிபுரம் கீழ் அம்பி பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வர் எடப்பாடியைப் போல பச்சை துண்டு அணிந்து, போராட்டத்தில் கலந்துகொண்டார்.  தொடர்ந்து, அந்த பகுதியில் உள்ள  வயலில் இறங்கிய ஸ்டாலின் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த பெண்களிடம் உரையாடினார்.