நம்பிக்கையில்லா தீர்மானம் எதிரொலி: ஸ்டாலின் தலைமையில் 28ந்தேதி திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

சென்னை:

ஜூன்-28ந்தேதி தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில், அன்றைய தினம் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்று திமுக கொறடா அறிவித்து உள்ளார்.

மானிய கோரிக்கை விவாதம் தொடர்பாக தமிழக சட்டமன்ற கூட்டம் வரும் 28ந்தேதி தொடங்கி ஜூலை 30ந்தேதி வரை 23 நாட்கள் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.

ஜனவரி 1ந்தேதி திமுக கொடுத்துள்ள சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானமும் சட்டமன்றத்தில் கொண்டு வரப்படுகிறது.  இந்த நிலையில்  திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வரும் 28-ஆம் தேதி கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என்று கொறடா சக்கரபாணி அறிவித்துள்ளார்.

அவ்ர விடுத்துள்ள அறிவிக்கையில்,  திமுக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில், திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் வரும் 28-ம் தேதி காலை 11 மணியளவில் அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெறும். அதுபோது திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்து உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.