லண்டனில் விம்பிள்டன் டென்னிஸை ரசித்த ஸ்டாலின்: தமிழக முன்னாள் வீரர் விஜய்அமிர்தராஜுடன் சந்திப்பு

லண்டன்:

ண்டன் சென்றுள்ள திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அங்கு நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி நடைபெறும் மைதானத்திற்கு சென்று போட்டியை ரசித்தார்.

அப்போது, தமிழகத்தில் டென்னிஸ் விளையாட்டை பிரபலப்படுத்தியவரும், முன்னாள் பிரபல டென்னிஸ் வீரருமான சென்னை சேர்ந்த விஜய்அமிர்தராஜை சந்தித்தார்.

டென்னிஸ் போட்டியை காண ஸ்டாலின் தனது மனைவியுடன் வருகை தந்திருப்பதை  அறிந்த விஜய் அமிர்தராஜ் அவர்களுக்கு நேரில் சென்று வணக்கம் தெரிவித்து மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து டென்னிஸ் மைதானத்தை சுற்றிப்பார்த்த ஸ்டாலின் தம்பதியினர், அங்குள்ள  விம்பிள்டன் டென்னிஸ் முன்னாள் சாம்பியனான எப்.ஜே.பெர்ரி சிலைக்கு அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

கடந்த 9ந்தேதி இரவு தனது மனைவி துர்காவுடன், திமுக செயல்தலைவர்  திடீரென லண்டன் புறப்பட்டு சென்றார். அவரது ரகசிய பயணம் பல்வேறு யூகங்களை எழுப்பிய நிலையில், இது,தனிப்பட்ட பயணம் என்றும் ஒரு வாரத்தில் திரும்புவார் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில், லண்டனில் ஸ்டாலின் தனது மனைவியுடன் விம்பிள் டென்னிஸ் விளையாட்டை ரசித்து வருவது திமுக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.