23ந்தேதிக்கு பிறகு தமிழக நிரந்தர முதல்வர் ஸ்டாலின் மட்டுமே! கனிமொழி அதிரடி

தூத்துக்குடி:

மிழகத்தின் நிரந்தர முதலமைச்சராக  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இருப்பார் இருப்பார் என்று திமுக எம்.பி.யும், ஸ்டாலினின் சகோதரியுமான  கனிமொழி உறுதிபட தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 18ந்தேதி முடி வடைந்த நிலையில், 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 19ந்தேதி நடைபெற உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பரபரப்பான அரசியல் காட்சிகள் அரங்கேறி வருகின்றன.

இந்த நிலையில், தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும், கனிமொழி, அந்த பகுதியில் உள்ள  தாளமுத்துநகர் சி.சவேரியார்புரத்தில் தி.மு.க. காரியாலயத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து செய்தி யளார்களிடம் பேசிய கனிமொழி, தமிழக தேர்தல் ஆணையர் மீது குறை கூறினார். கோவையில் இருந்து தேனிக்கு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் மாற்றுவது குறித்து வேட்பாளர்களிடம்  தெரிவித்திருக்க வேண்டும் என்று, ஆனால் தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார் என்று குற்றம்சாட்டினார்.

எதிர்கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் தேர்தல் ஆணையம் மீது நம்பிக்கை இல்லை என்றும், தேர்தல் ஆணையம் சுகந்திரமாக செயல்படவில்லைஎன்றும் தெரிவித்தார்.

தேர்தல் முடிவுக்கு பிறகு, தமிழகத்தில் மு.க.ஸ்டாலின்தான் முதல்வராக பதவி ஏற்பார் என்று கூறிய கனிமொழி,  ஸ்டாலின் முதலமைச்சராக கனவு தான் காண முடியும் என எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். இதற்கு முன்பு, தான் முதலமைச்சர் ஆகுவோம் என்று பழனிசாமி கனவு கண்டிருக்கமாட்டார்  என்றும் விமர்சித்தார். வருகிற 23-ந் தேதிக்கு பின்னர் ஸ்டாலின் தான் தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சராக வருவார் என்று உறுதியாக கூறினார்.

அதற்கு பின்னர் எடப்பாடி பழனிசாமி, தாம் ஒருபோதும் முதலமைச்சர் ஆகுவோம் என்று கனவு கூட காண முடியாது என்றும், ஸ்டாலினை விமர்சிக்கும் தகுதி எடப்பாடி பழனிச்சாமிக்கோ, அ.தி.மு.க.வினருக்கோ கிடையாது.

இவ்வாறு கனிமொழி காட்டமாக கூறினார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Chief Minister of Tamilnadu, kanimozhi, stalin
-=-