திட்டமிட்டு வன்முறையை நடத்தினார் ஸ்டாலின்: அன்புமணி குற்றச்சாட்டு

--

சென்னை: 

பேரவையில் நடத்தப்பட்ட வன்முறை ஸ்டாலின் திட்டமிட்டு நடத்தியது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் சட்டமன்ற நிகழ்வுகள் குறித்து விவரத்துள்ளார். அதில்” தமிழக அரசியல் இன்று மேலும் ஒரு அதிரடி திருப்பத்தை எதிர்கொள்ளும் சூழலில் இருக்கிறது. தமிழக முதல்வராகியுள்ள எடப்பாடி பழனிசாமியின் அமைச்சரவை பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான பலப்பரீட்சை சட்டப்பேரவையில் நடந்து கொண்டிருக்கிறது.

காலையிலிருந்து எம்.எல்.ஏக்களின் தொடர் அமளியால் சட்டப்பேரவை இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை சுற்றிலும் அதிகமான போலீஸார் குவிக்கப்பட்டு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில் இது தொடர்பாக அன்புமணி ட்விட்டரில், ”ஜனநாயகம் அவமானப்படுத்தப்பட்டுள்ளது. திமுகவினர் மற்றும் மு.க. ஸ்டாலினால் நடத்தப்பட்ட திட்டமிட்ட வன்முறை” என்று குற்றம்சாட்டியுள்ளார்.