பன்னீருக்கு ஆதரவு?..ஸ்டாலின் திடீர் மறுப்பு

--

 

மதுரை:

பன்னீர் செல்வத்திற்கு தி.மு.க. ஆதரவு வழங்கும் என திமுக மூத்த நிர்வாகி சுப்புலெட்சுமி ஜெகதீசன் கூறியதாக செய்திகள் வெளி வந்தது. இது குறித்து தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் கூறுகையில், ‘‘ சுப்புலெட்சுமி ஜெகதீசனின் கருத்தில் தி.மு.க.விற்கு உடன்பாடு இல்லை. தமிழகத்தில் தற்போது நிலவும் அசாதாரண அரசியல் சூழல் குறித்து தலைவர், பொதுச்செயலாளர் தான் முடிவு செய்வார்கள். அதுவரை மூத்த நிர்வாகிகள் தனிப்பட்ட முறையில் கருத்துக்களை வெளியிடக்கூடாது’’ என தெரிவித்துள்ளார்.