சென்னை

மிழக அரசு பொங்கல் பரிசாக வழக்கும் சர்க்கரைக்கு பதில் வெல்லம் தர வேண்டும் என முக ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழ்நாடு அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக பச்சரிசி, சர்க்கரை, கரும்புத் துண்டு, முந்திரி, திராட்சை, ஏலக்காய் ஆகியவைகளை வழங்க உள்ளது.  இந்தப் பரிசு வரும் ஜனவரி மாதம் 5 ஆம் தேதி முதல் வழங்கப் படும் என அரசு அறிவித்துள்ளது.   இது குறித்து திமுக செயல்தலைவர் மு க ஸ்டாலின் தனஹு டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு அளித்துள்ளார்.

அப்பதிவில், “தமிழக அரசு பொங்கல் பரிசாக சர்க்கரை தர வேண்டாம்.   அதற்கு பதிலாக வெல்லம் தர வேண்டும்”  எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.   அத்துடன், “அதிமுக தற்போது பாஜகவின் கிளைக்கட்சியாக மாறி விட்டது.   பாஜக வின் இரண்டு அணிகளை பாஜக இணைத்ததை இந்த நாடே அறியும்.   மக்களை திசை திருப்பவே தற்போது பாஜகவுடன் கூட்டணி இல்லை என முதல்வர் சொல்லி வருகிறார்” எனவும் தெரிவித்துள்ளார்.    மேலும் விவசாயிகளுக்கு எதிராக தமிழக அரசு செயல் படுவதாகவும் குற்றம் சாட்டி உள்ளார்.