தலைவர் பொறுப்புடன் பொதுச்செயலாளர் பொறுப்பையும் பயன்படுத்த தொடங்கினார் மு.க.ஸ்டாலின்

சென்னை:

ட்சித் தலைவர் பொறுப்புடன், தற்போது பொதுச்செயலாளர் பொறுப்பையும்  மு.க.ஸ்டாலின் பயன்படுத்த தொடங்கி உள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி மறைவைத்தொடர்ந்து, திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் கட்சியினரால் தேர்வு செய்யப்பட்டார்.  அதைத் தொடர்ந்து திமுக தலைவராக தனது பணியை செவ்வனே செய்து வருகிறார். இதற்கிடையில், பொதுச்செயலாளர் அன்பழகனும், வயது முதிர்வு மற்றும் உடல்நலம் காரணமாக கழகப்பணிகளில் பங்கேற்க முடியாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இந்த நிலையில்,  திமுக பொதுச்செயலாளரின் அதிகாரங்களை திமுக தலைவரான மு.க.ஸ்டாலின் பயன்படுத்தத் தொடங்க உள்ளார்.

இன்று திமுக நாளிதழின முரசொலியில் வெளியிடப்பபட்ட கட்சித்தொடர்பான அறிவிப்பில், திமுக பொதுச்செயலாளர் என்ற பதவிக்கான பெயரில் மு.க.ஸ்டாலின் என்ற பெயரில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது….

ஏற்கனவே கடந்த  2019 ஆண்டு நவம்பர் மாதம்  நடைபெற்ற திமுக பொதுக்குழுவில், பொதுச்செயலாளர் அன்பழகன் உடல்நிலையை கருத்தில்கொண்டு, அவரது பதவி, தற்காலிகமாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டது.

தற்போது அன்பழகன் செயல்பட முடியாத நிலையில், இதுவரை கட்சி  உறுப்பினர் நியமனம், நீக்கம் போன்றவை க அன்பழகன் பெயரில் வந்துகொண்டிருந்த நிலையில், தற்போது, மு.க. ஸ்டாலின் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி தலைமைக்கழக அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.