மம்தாவின் 3வது அணிக்கு ஸ்டாலின் திடீர் ஆதரவு

சென்னை:

பா.ஜ.க, காங்கிரஸ் அல்லாத 3வது அணியை உருவாக்கும் முயற்சியில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் திமுக, பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட பல மாநில கட்சிகளுக்கு சந்திரசேகர் ராவ் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில் திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “வலுவாக கூட்டாட்சி, மாநில கட்சிகளின் ஒற்றுமைக்கு திமுக எப்போதுமே துணை நிற்கும்.

பா.ஜ.க வை எதிர்த்து நிற்க பல்வேறு கட்சிகளை ஒன்றிணைக்கும் மம்தா பானர்ஜி முயற்சிக்கு ஆதரவு தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.