இந்தியாவிலேயே உயரமான கட்சி கொடிக்கம்பத்தில் திமுக கொடியை ஸ்டாலின் இன்று ஏற்றி வைக்கிறார்

சென்னை

ந்திய அரசியல் கட்சிகளிலே தலைமை அலுவலகத்தில் உயரமான கொடிமரத்தை கொண்ட பெருமையை திமுக பெறுகிறது.

 

திமுக தென்சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மா சுப்பரமணியன் கட்சியின் தலைமையிடமிடம் மிக பெரிய கொடி கம்பத்தை நிறுவ வேண்டுமென விருப்பத்தை தெரிவித்து அதற்கான பணிகளை மேற்கொண்டார்.

சென்னையில் இதய பகுதியாய் கருத படும் அண்ணாசாலையில் பிரம்மாண்ட இந்த இரும்பினால் செய்யபட்ட கொடி மரம்எடையுள்ள 2430கிலோ கொண்டது.   வாகா எல்லையில் 320அடி உயரம் தேசிய கொடி மரத்தை நிறுவிய நிறுவனத்திடம் திமுக கொடி மரம் அமைக்கும் பணி ஒப்படைக்கபட்டது.

பிரம்மாணட இந்த கொடி மரத்தில் 20அடி நீளம் 30அடி அகலம் வெல்வெட் துணியால் தயாரிக்கபட்ட கொடி மோட்டார் மூலம் ஏற்றபடும். கொடி உச்சியில் நின்று பறப்பதற்கு 11நிமிடங்கள் ஆகும் கூறப்படுகிறது..நான்கு மாதத்திற்கு ஒரு முறை கொடியினை மாற்றும் வகையில் கொடி அமைக்கபட்டுள்ளது..

அண்ணா அறிவாலயத்தில், 114 அடி உயரம் கொண்ட கொடி கம்பத்தில், திமுக கொடியை, அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின், புதன்கிழமை ஏற்றி வைக்கிறார். இந்த கொடி கம்பத்தில் 30 அடி நீளம் – 20 அடி அகலம் கொண்ட திமுக கொடி, பறக்கும் என்று அக்கட்சியின் தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.