மதுரையில் ஸ்டாலின் வைகோ திடீர் சந்திப்பு!!

மதுரை:

மதுரையில் நாளை நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்காக திமுக பொதுச் செயலாளர் ஸ்டாலின் இன்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம மதுரை புறப்பட்டுச் சென்றார்.

மதுரை விமானநிலையத்தில் இருந்து ஸ்டாலின் வெளியே செல்ல முயன்றபோது, அங்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எதிர்பாராதவிதமாக வந்தார். இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து கொண்டனர். இரு கைகுலுக்கி சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தனர்.