ரெயில் மறியல் போராட்டம்: ஸ்டாலின் – வைகோ – திருமா கைது!

--

சென்னை

காவேரி விவகாரத்தில் கர்நாடகவில் தமிழர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும் காவேரி தண்ணீர் திறந்து விட வலியுறுத்தியும் இன்று விவசாயிகள் சங்கம் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

அனைத்து அரசியல் கட்சியனரும் ஆதரவு கொடுத்துள்ள நிலையில் ஆங்காங்கே  ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.

ஸ்டாலின்:

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரெயிலை மறிக்க சென்ற எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். அவருடன் ஏராளமான திமுகவினரும் கைதாயினர்.

திருமாவளவன்

சென்னை   பேசின் பிரிஜ்ஜில்  ரெயில் மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கைது செய்யப்பட்டார்

வைகோ 

திருச்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ரயில் மறியல் செய்ய முயன்றவரை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.

மேலும் ஆங்காங்கே அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ம.சுப்பிரமணி தலைமையில் திமுகவினர் சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம்