ஆளுநர் உரையை புறக்கணித்து ஸ்டாலின் வெளிநடப்பு

சென்னை:

ளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் இருந்து ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

புத்தாண்டின்  முதல் தமிழக சட்டப்பேரவைக்கூட்டம்  இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டமன்றத்தில் தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் தொடங்கியது.

காலை 10 மணி அளவில் சபை தொடங்கியதும் ஆளுநர் உரையாற்ற தயாரானார்.  அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மு.க.ஸ்டாலின் சபையைவிட்டு வெளிநடப்பு செய்தார். அதைத் தொடர்ந்து திமுக சட்டமன்ற உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.