திருவாரூர்:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக சார்பில் திருவாரூரில் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ‘‘காவிரி உரிமையை திமுக தலைவர் கருணாநிதி தான் விட்டுக் கொடுத்தார். காவிரியில் கர்நாடகா பல்வேறு அணைகளை கட்டியபோது கருணாநிதி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மத்தியிலும், மாநிலத்திலும் திமுக ஆட்சியில் இருந்த போதும் காவிரி பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை.

2007-ம் ஆண்டில் மத்திய அரசுக்கு திமுக அழுத்தம் கொடுத்திருந்தால் காவிரி பிரச்னை தீர்க்கப்பட்டு இருக்கும். காவிரி இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட திமுக நடவடிக்கை எடுக்கவில்லை. காவிரி விவகாரத்தில் செய்த தவறுகளை மறைக்கவே ஸ்டாலின் நடைபயணம் மேற்கொள்கிறார்’’ என்றார்.