நாடு பொருளாதார இக்கட்டில் சிக்கியுள்ளது: திமுக தலைவர் ஸ்டாலின்

சென்னை: நாடு தற்போது மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருப்பதாகவும், அதிலிருந்து மீண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டுமெனவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது, “தற்போதைய பொருளாதார நிலை குறித்த உண்மைகளை மத்திய அரசு மறைக்கிறது. ஆனால், பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இப்போது.

மேலும், நாட்டின் பொருளாதாரம் குறித்த தவறான தரவுகளை வழங்குவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும். வரும் 2030ம் ஆண்டில் அனைத்து வாகனங்களும் எலக்ட்ரிக் மயமாக்கப்படும் என்று நரேந்திர மோடி அறிவித்ததால் தற்போது ஆட்டோமொபைல் தொழில்துறை பெரும் நசிவில் சிக்கியுள்ளது.

அத்துறையில் 31% வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. பல லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர். மோடியின் புதிய அறிவிப்பு மட்டுமின்றி, அதிகளவிலான ஜிஎஸ்டி வரிவிதிப்பும் அத்துறையின் நசிவுக்கு ஒரு காரணம். அத்துறையில் ஏற்பட்ட நஷ்ட அளவு ரூ.3000 கோடி என்பதாக அதிகரித்துள்ளது. இதேநிலை நீடித்தால், வேலையிழப்போர் எண்ணிக்கை 10 லட்சம் என்பதாக இருக்கும்” என்றார் ஸ்டாலின்.

என்றார். கடந்த 2017ம் ஆண்டுவரை ஆட்டோமொபைல் துறையில் தொடர்ந்த வளர்ச்சி இருந்தது. ஆனால், தற்போது பெரிய வீழ்ச்சி தொடங்கியுள்ளது.