முதல்வர் பதவியை பிடிக்க ஸ்டாலின் வேஷம்…ஓ.பன்னீர்செல்வம்

திருவாரூர்:

முதல்வர் பதவியை ஸ்டாலின் போடும் வேஷம் எடுபடாது என்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறினார்.

திருவாரூரில் அதிமுக பொதுக் கூட்டம் இன்று நடந்தது. இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசகையில்,‘‘ அதிமுகவிற்கு முதுகெலும்பு இல்லை என்று ஸ்டாலின் கூறியுள்ளார். அதையும் நாங்கள் தவிடுபொடி ஆக்கியுள்ளோம். காவிரி விவகாரத்தில் சட்டப்போராட்டம் நடத்தி வெற்றி பெற்றது முதுகெலும்பு இருப்பதால் தான்.

முதல்வர் பதவியை பிடிக்க 2016ம் ஆண்டு தேர்தலின் போதே ஸ்டாலின் பல வேஷங்கள் போட்டார். ஆனால், அது எடுபடவில்லை. அதேபோல் தற்போதும் அவரது வேஷம் எடுபடாது. டிடிவி தினகரன் விரைவில் காணாமல் போய்விடுவார்’’ என்றார்.