ஸ்டாலின் தலைமையில் 31ந்தேதி மாலை அனைத்துக்கட்சிக் கூட்டம்… திமுக அறிவிப்பு

--
சென்னை:
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 31ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை )  மாலை அனைத்துக்கட்சிக் கூட்டம் காணொளி காட்சி மூலம் நடைபெறும் என  திமுக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
இதுகுறித்து திமுக வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  ஸ்டாலின்   தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம், 31-05-2020 அன்று, மாலை 4:30 மணிக்கு, காணொலி காட்சி வாயிலாக நடைபெறும்.
இந்த கூட்டத்தில்,  மருத்துவ கல்வியில் இட ஒதுக்கீட்டை மறுக்கும் பாஜக அரசு  மற்றும்,  கொரோனா தடுப்பில் மத்திய – மாநில அரசுகளின் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான இடங்களில் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான டி.கே.எஸ். இளங்கோவன் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.  அதில்,  முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான இடங்களில் 50 விழுக்காடு இடஒதுக்கீடு இதர பிற்படுத்தப்பட்டோ ருக்கு வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாகவும்  மருத்துவக் கல்வியில் இதர பிற்படுத்தப்பட்டபிரிவினருக்கான (OBC) இடஒதுக்கீட்டை மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்தும்,  கொ ரோனா நோய் தடுப்பில் மத்திய, மாநில அரசின் செயல்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடைபெற உள்ளது.

You may have missed