கனிமொழி 50: பொன்னாடை போர்த்தி வாழ்த்திய ஸ்டாலின்!

சென்னை:

னிமொழி தனது ஐம்பதாவது  பிறந்தநாளை இன்று உற்சாகமாக கொண்டாடினார்.

கனிமொழி எம்பியின் பொன்விழா பிறந்தநாள் இன்று. இதை முன்னிட்டு சிஐடி காலனி வீடு விழாக்கோலம் பூண்டிருக்கிறது. அங்கு தொண்டர்கள் குவிந்துள்ளனர். வாழ்த்து முழக்கம் அதிரவைக்கிறது.

சி.ஐ.டி. நகர் பகுதியில் பிறந்தநாள் வாழ்த்து போஸ்டர்கள் ஏராளமாக ஒட்டப்பட்டுள்ளன.

கடந்த ஏழு வருடங்களாக நடந்துவந்த 2 ஜி வழக்கில் இருந்து சமீபத்தில் கனிமொழி விடுதலை ஆனார். இதனால் கடந்த வருடங்களைவிட விட இன்று கூடுதல் உற்சாகத்துடன் பிறந்தநாளை கொண்டாடுகிறார் கனிமொழி.

அவருக்கு இந்த வருடம் பொன்விழா பிறந்தநாள் என்பதும் கூடுதல் உற்சாகத்துக்குக் காரணம்.

இன்று காலை, ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது அண்ணனும் கட்சியின் செயல் தலைவருமான மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து கனிமொழி வாழ்த்து பெற்றார் அப்போது ஸ்டாலின் மஞ்சள் நிற  பொன்னாடை போர்த்தினார். துர்க்கா ஸ்டாலின் நீல கலர் பட்டுப்புடவையை கனிமொழிக்கு பரிசளித்தார்.

அடுத்து கோபாலபுரம் சென்ற கனிமொழி, தனது தந்தையும் திமுக தலைவருமான கருணாநிதியிடம் ஆசி பெற்றார்.

பிறகு கனிமொழிக்கு  தொண்டர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து பரிசுகளை அளித்தனர்.