குட்கா விவகாரம்: சிபிஐ.க்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை:

டில்லியில் உள்ள சி.பி.ஐ. இயக்குனர் மற்றும் உள்துறை செயலாளருக்கு தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அதில்,‘‘ குட்கா ஊழல் வழக்கில் நீதியை நிலைநாட்ட சி.பி.ஐ. விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். குட்கா ஊழல் வழக்கு விசாரணைக்கு சிறப்பு புலானாய்வு குழுவை உடனே அமைக்க வேண்டும்.
விசாரணை நேர்மையாகவும், விரைவாகவும் நடைபெற வேறு மாநில அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.

ஊழல் அரசியல்வாதிகள், நேர்மையற்ற அதிகாரிகள் என பின்னி பிணைந்திருப்பதை அப்புறப்படுத்த வேண்டும். தமிழகத்தின் முக்கியமான இந்த வழக்கின் விசாரணையை நேர்மையாக, நியாயமாக நடத்த வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.