சென்னை:

மிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய (டிஎன்பிஎஸ்சி) உறுப்பினர்கள் நியமனத்தை கவர்னர் உடனடியாக  ரத்து செய்ய வேண்டும்’ என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

திமுக செயல்தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் இதுகுறித்து விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கடந்த, 2016ம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டது தவறு என்று சென்னை உயர்நீதி மன்றம் அவர்களை பணி நீக்கம் செய்ய உத்தரவிட்டது,

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்த உறுப்பினர்களின் பட்டியலில் இருந்தே, மீண்டும் ஐந்து உறுப்பினர்களை, தேர்வாணையத்துக்கு நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இது அரசியல் சட்ட விரோத நடவடிக்கை.

இளைஞர்கள் நம்பிக்கை வைத்திருக்கும் தேர்வாணைய நேர்மை தன்மையை, சூறையாடும் நடவடிக்கை.

உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரான உறுப்பினர்கள் நியமனத்தை, கவர்னர் உடனே ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்  கூறி உள்ளார்.