காவிரி தீர்ப்பு: அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட ஸ்டாலின் வலியுறுத்தல்

--

சென்னை:

காவிரி மேல்முறையீட்டு வழக்கில், தமிழகத்திற்கு தண்ணீர் குறைத்து உச்சநீதி மன்றம் தீர்ப்பு அளித்துள்ளதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையில், தமிழகத்திற்கு வழங்கப்பட்டு வந்த  192 டி.எம்.சி. காவிரி தண்ணீரின் அளவு, தற்போது 177.25 டி.எம்.சி.யாக குறைக்கப்பட்டிருப்பது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் மட்டுமின்றி, விவசாயிகளும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், காவிரி வழக்கில் உச்சநீதி மன்றம் அளித்துள்ள தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது.  காவிரி நடுவர் மன்றம் அளித்த இடைக்காலத் தீர்ப்பையும், இறுதித் தீர்ப்பையும், காவிரி நீர் திறந்துவிடக் கோரி உச்சநீதிமன்றம் அவ்வப்போது பிறப்பித்த உத்தரவுகளையும் இதுவரை மதிக்காத கர்நாடக மாநிலத்திற்கு, ஏற்கனவே வழங்கப்பட்டதை விட கூடுதலாக 14.5 டி.எம்.சி. தண்ணீர் கிடைத்து இருக்கிறது.

இந்த வழக்கில்,   புவியியல் மற்றும் சரித்திர ரீதியாக தமிழகத்திற்கே உரித்தான காவிரி நீரைப் பெறுவதற்கான, நியாயமான ஆதாரங்களை உச்சநீதிமன்றத்தில் போதிய அளவில் முன்வைக்கத் தவறிய அ.தி.மு.க. அரசுக்கு தி.மு.க.வின் சார்பில் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்வதாகவும் கூறி உள்ளார்.

மேலும், காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் கருணாநிதி தமிழகத்திற்குப் பெற்றுத் தந்த உரிமைகளை, அ.தி.மு.க. அரசு இன்றைக்கு பறிகொடுத்து விட்டது என்றும்,  தமிழகத்திற்கான காவிரி நீரின் அளவு குறைக்கப்பட்டு, தமிழகம் வஞ்சிக்கப்பட்டுள்ளது

காவிரிதீர்ப்பு காரணமாக  இன்றைக்கு உருவாகியுள்ள அசாதாரண சூழ்நிலை குறித்து விவாதிக்கவும், அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்தும் முதல்வர் எடப்பாடி  உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றும்அ ந்தக் கூட்டத்தில் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.