ஸ்டாலின் தலைமை செயலகம் வருகை! முதல்வருடன் ஆலோசனை?

சென்னை,

மிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சுமார் 12 மணி அளவில்  தலைமைச் செயலகம் வந்தார். அவருடன் திமுக எம்எல்ஏக்கள் துரைமுருகன், பொன்முடி உள்பட  சிலர் வந்திருந்தனர்.

அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி பிரச்சினை காரணமாக, தற்போது காபந்து முதல்வராக இருக்கும் பன்னீர் செல்வமும் இன்று மதியம் தலைமை செயலகம் வருவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்நிலையில் ஓபிஎஸ்சும் இன்னும்  சிறிது நேரத்தில் தலைமை செயலகம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று திமுக உயர்மட்ட குழு கூட இருக்கும் நிலையில் திமுகவின் செயல்தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான  மு.க.ஸ்டாலின் தலைமை செயலகம் வந்திருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

அவர் தமிழக முதல்வர் ஓபிஎஸ்-ஐ சந்திக்கககூடும் எனவும், தற்போதுள்ள பிரச்சினைகள் குறித்து இருவரும் ஆலோசனை செய்ய இருப்பதாகவும்  தகவல்கள் உலா வருகின்றன.