சென்னை:

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடியவா்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலுக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  கண்டனம் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை, சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். இதில் வன்முறை ஏற்பட்டது. இதில் காவல்துறை அதிகாரிகள் பலர் காயமடைந்ததைத்  தொடர்ந்து, போலீசார்  தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

இந்த நிலையில், போலீஸாரைக் கண்டித்தும், இந்தப் போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டவா்களை விடுவிக்கக் கோரியும் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இஸ்லாமிய அமைப்பினா் வெள்ளிக்கிழமை இரவு முதல் விடிய விடிய சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த  சம்பவத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள கண்டன செய்தியில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக அமைதி வழியில் போராடிய மக்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தி, பிப். 14 இரவை கறுப்பு இரவாக்கிய காவல்துறைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் கைது செய்யப்பட்டவர்களை விடுவிடுப்பதுடன், அவர்கள் மீதான வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.