தமிழகம் – புதுவையில் ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்!

சென்னை,

மிழகத்தின் 3 தொகுதிகள் மற்றும் புதுவை நெல்லித்தோப்பு தொகுதியிலும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

4 தொகுதிகளிலும் மொத்தம் 7 நாட்கள் ஸ்டாலின் பிரசார பயணம் செய்கிறார்.

 

தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் புதுவை நெல்லித்தோப்பு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெற இருக்கிறது.

இத்தொகுதிகளில் தி.மு.க. பொருளாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் 7 நாட்கள் பிரசாரம் செய்து தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

ஸ்டாலின்  சுற்றுப்பயணம் விவரம்

10  மற்றும் 11-ந்தேதிகளில் அரவக்குறிச்சி தொகுதி –  வீதி வீதியாக சென்று பிரசாரம் செய்கிறார்.

13-ந்தேதி புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதி – புதுவை முதல்வர் நாராயணசாமிக்கு ஆதரவாக பிரசாரம்
14 மற்றும் 15  தேதிகளில் திருப்பரங்குன்றம் தொகுதி – வீதி வீதியாக சென்று பிரசாரம் செய்கிறார்.

16 மற்றும்  17-ந்தேதிகளில் தஞ்சாவூர்  தொகுதி –   வீதி வீதியாக சென்று பிரசாரம் செய்கிறார்.

இவ்வாறு  அவரது பிரசார சுற்றுப்பணத்தில் கூறப்பட்டுள்ளது.