மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திருமுருகன் காந்தியுடன் ஸ்டாலின் சந்திப்பு

சென்னை:

ல்வேறு வழக்குகள் காரணமாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த திருமுருகன் காந்தி நேற்று சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்தார். அவருக்கு ஏற்பட்டிருந்த உடல்நலக்குறைவு காரணமாக  நேற்று இரவு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று  நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி நேற்று நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். 52 நாட்கள் தனிமை  சிறையில்  அடைக்கப்பட்டி ருந்ததால், அவருக்கு பல்வேறு நோய்கள் ஏற்பட்டன. இதையடுத்து,அவருக்கு நீதி மன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது.

இந்த நிலையில் சிறையில் இருந்து வெளியே வந்த அவருக்கு மருத்துவர் எழிலன் என்பவர்  உடல் நலப்பரிசோதனை நடத்தினனார். அதைத்தொடர்ந்து, அவரது அறிவுறுத்தலின் பேரில் தனியார்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று முற்பகல் மருத்துவமனைக்கு சென்று திருமுருகன் காந்தியை சந்தித்து நலம் விசாரித்தார். அவர் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்தார்.