கிருஷ்ணர் குறித்து அவதூறு: கி.வீரமணி கருத்துக்கு ஸ்டாலின் எதிர்ப்பு

சென்னை:

திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வரும் திராவிடர் கழகத் தலைவர்  கி வீரமணி கிருஷ்ணர் குறித்து அவதூறாக பேசியது, இந்து மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், கி.வீரமணி கிருஷ்ணன்  குறித்து  தவறாக பேசியிருந்தால் ஏற்றுக்கொள்ள முடியாது, அது தவறு; அவர் உள்நோக்கத்தோடு எதுவும் பேசவில்லை என்று விளக்கம் கூறியுள்ள ஸ்டாலின்  எனது மனைவியும் கடவுள் நம்பிக்கை உடையவர்  என்று தெரிவித்து உள்ளார்.

பொள்ளாச்சியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட திக தலைவர் கடவுள் கிருஷ்ணரை பொள்ளாச்சி பாலியல்  சம்பவத்துடன் தொடர்புபடுத்தி  சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இது இந்து மக்களிடையே கடும் கோபத்தை  கிளறி உள்ளது. இதைத்தொடர்ந்து, திமுக கூட்டணிக்கு ஓட்டு போடக்கூடாது என்று இந்து அமைப்பினர் வீடு வீடாகவும், சமூக வலைதளங்களில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். கோவை சுற்றுவட்டார பகுதிகளில், இந்து மக்கள் அவர்களின் வீட்டு வாசலில் திமுக கூட்டணி கட்சியினர் எங்களிடம் வாக்கு கேட்க வர வேண்டாம் என்று நோட்டீஸ் ஒட்டி வருகின்றனர்.  இது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்டாலின், கி.வீரமணி கிருஷ்ணன்  குறித்து  தவறாக பேசியிருந்தால் ஏற்றுக்கொள்ள முடியாது, அது தவறு; அவர் உள்நோக்கத்தோடு எதுவும் பேசவில்லை என்று விளக்கம் கூறியுள்ள ஸ்டாலின்  எனது மனைவியும் கடவுள் நம்பிக்கை உடையவர்  என்று தெரிவித்து உள்ளார்.

ஏற்கனவே அரக்கோணம் தொகுதியில் பேசிய ஸ்டாலின்,   ஒன்றே குலம் ஒருவனே தேவன் என அண்ணா கூறியதாக தெரிவித்தவர்,  நாங்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் அல்ல,  இந்து மதம் மட்டுமல்ல. எந்த மதத்திற்கும் நாங்கள் எதிரி கிடையாது என்று கூறியவர், என் மனைவி கோயிலுக்கு செல்வதை நான் தடுத்ததில்லை என்றும்,  கோயில்கள் கூடாது என்பது திமுகவின் கொள்கை அல்ல. அது கொடியவர்களின் கூடாரமாகி விடக் கூடாது என்பதுதான் திமுகவின் கொள்கை என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.