பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்பு: கனிமொழி தகவல்

சென்னை:

லைநகர் டில்லியில் நடைபெற இருக்கும் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்துகொள்வார் என்று திமுக எம்.பி. கனிமொழி கூறினார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக மகளிர் அணி தலைவியும், எம்.பி.யுமான கனிமொழி வரும் 10ந்தேதி (திங்கட்கிழமை டில்லியில் எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

வர உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் வகையில் கூட்டணி சேர்ந்த இந்த எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் திமுக தவைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார், அப்போது திமுக தலைவர் திருவுருவ சிலை விழாவில் கலந்துகொள்ள அனைத்து எதிர்க்கட்சியினருக்கும் அவர் அழைப்பிதழ் கொடுத்து அழைப்பு  என்று கூறினார்.

மேலும், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், மாநிலங்களவையில்  கஜா புயல் நிவாரணம் விவகாரத்தை திமுக  எழுப்பும் என்றும் தெரிவித்தார்.