25ஆண்டுகளில் ஸ்டாலின் ஜனாதிபதியாம்….! துரைமுருகன்

ஓட்டப்பிடாரம்:

திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன், இன்னும் 25 ஆண்டு களில் மு.க.ஸ்டாலின் ஜனாதிபதியாக பதவி ஏற்பார் என்று தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரசாரம் சூடுபறக்கும் நிலையில், ஓட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர்கள் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே 1ந்தேதி, 2ந்தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்ட நிலையில், இன்று தூத்துக்குடி ஓட்டபிடாரம் தொகுதி திமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட திமுக பொருளாளர் துரைமுருகன், தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நிர்வாகிகளிடம் பேசியவர், மேலும், திமுகவுக்கு ஸ்டாலினை தவிர பொருத்தமான தலைவர் இல்லை என கூறியுள்ள துரை முருகன், அடுத்த 25 ஆண்டுகளில் ஜனாதிபதியாக கூட ஸ்டாலினுக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய துரைமுருகன், எடப்பாடி அரசு,  தோல்வி பயத்தின் காரணமாக 3 எம்.எல்.ஏக்கள் மீது  நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது  என்றவர் , இடைத்தேர்தலுக்கு பிறகு அதிமுக அரசு நீடிக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.