சென்னை:

திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில், திமுக எம்.பி.க்களின் கூட்டம் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த திடீர் ஆலோசனை கட்சி யினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி திமுக, தற்போது 20 எம்.பி.க் களுடன் நாடாளுமன்றத்தை பரபரப்பாக்குள்ளாக்கி வருகிறது.

தற்போது நாடு முழுவதும் பரபரப்பாக விவாதிக்கப்பபட்டு வரும் காஷ்மீர் பிரச்சினை, தமிழக உள்ளாட்சித் தேர்தல், எடப்பாடி வெளிநாடு பயணம் போன்று பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வரும் நிலையில், திமுக திடீரென எம்.பி.க்கள் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தியது.

காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த ஆலோசனை 11 மணி வரை நடைபெற்றது. இதில் திமுகவைச் சேர்ந்த  20 எம்பிக்களும்  கலந்து கொண்டனர். அவர்களுடன் ராஜ்யசபா எம்.பி.க்களும் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில்,  மக்களின் எதிர்பார்ப்பு என்ன, எம்பி நிதியை எப்படி மக்களுக்கு செலவு செய்வது,  தமிழக உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது மற்றும், காஷ்மீர் பிரச்னையில் திமுகவின் நிலைப்பாடு என்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் சமூக வலைதளங்களில் திமுக குறித்து விமர்சிக்கப்பட்டு வருகிறது, அதை எதிர்கொள்வது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.