காமிக் உலகின் பிதாமகன் ஸ்டான் லீ காலமானார்

--

நியூயார்க்:

காமிக் உலகின் பிதாமகன் என்று அழைக்கப்பட்ட அமெரிக்காவை சேர்ந்த ஸ்டான் ஸ்டான் லீ காலமானார். அவருக்கு வயது 95.  அவருக்கு உலகம் முழுவதும் அவரது ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தின் இயக்குனரும் அமெரிக்க எழுத்தாளரும் உலகப்புகழ் பெற்ற சூப்பர் ஹீரோக்களின் படைப்பாளியுமான ஸ்டான் லீ காலமானார். புகழ்பெற்ற ஸ்பைடர் மேன், அயர்ன் மேன், எக்ஸ் மேன் சூப்பர் ஹீரோக்களை உருவாக்கியவர் ஸ்டான் லீ.

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் மன்ஹாட்டன் என்ற இடத்தில்  கடந்த 1922ம் ஆண்டு பிறந்த ஸ்டேன்லீ, கடந்த 1961ம் ஆண்டு ‘பேன்டாஸ்டிக் போர்’ என்ற முதல் காமிக்ஸ் சூப்பர் ஹீரோக்களை உருவாக்கினார். இந்த படைப்பின்போது, அவருக்கு ஜேக் கிர்பி என்பவர் உறுதுணையாக இருந்தார்.

இந்த நிலையில், ஸ்டான் லீ வயது முதிர்வு காரணமாக  கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு  சிகிச்சை பெற்று வந்த நேற்று காலமானதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனால் காமிக்ஸ் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனனர்.

ஸ்டான் லீயின் படைப்பு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. குறிப்பாக  ஸ்பைடர் மேன், பிளாக் பாந்தர், ஹல்க் உள்ளிட்ட பல காமிக்ஸ்க ஹீரோக்களை உருவாக்கியதன் காரணமாக  உலகப்புகழ் பெற்றார். மேலும் சில படங்களிலும் அவர் தோன்றி உள்ளார்.

ஸ்டேன்லி மறைவிற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்பட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.