ஐபிஎல் 2018 : ஆஸ்திரேலியா வீரரை இழந்த ஐதராபாத் அணி

மும்பை

பிஎல் 2018 போட்டிகளில் இருந்து காயம் காரணமாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை சேர்ந்த ஆஸ்திரேலிய வீரர் பில்லி ஸ்டேன்லேக் விலகி உள்ளார்.

வேகப்பந்து வீச்சாளரான பில்லி ஸ்டேன்லேக் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவ்ர்.  இவரை ஐபிஎல் ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாஹ் அணி ரூ. 50 லட்சத்துக்கு எடுத்தது.   இவர் இந்த போட்டிகளில் ஐதராபாத் அணிக்கு முக்கிய வீரராக இருந்தார்.   இதுவரை இவர் இந்த சிசனில் 4 போட்டிகளில் விளையாடி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.

இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக விளையாடும் போது வலது கை விரலில் காயம் ஏற்பட்டுள்ளது.   இதை ஒட்டி ஆஸ்திரேலியாவுக்கு இவர் திரும்பி உள்ளார்.  தற்போது அவர் ஐபிஎல் போட்டியில் இருந்து விலகி உள்ளதாக அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.  இதனால் ஐதராபாத் அணி தனது முக்கிய வீரர் ஒருவரை இழந்துள்ளது.