ஸ்டான்லி அரசு மருத்துவமனை எலும்பியல் மருத்துவர் கண்ணன் மாடியில் இருந்து குதித்து தற்கொலை!

சென்னை:
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த எலும்பியல் மருத்துவர் கண்ணன் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவில் தீவிரமடைந்து வருவதால், மருத்துவர்களும், சுகாதாரத்துறை பணியாளர்களும் ஓய்வின்றி பணியாற்றி வருகின்றனர். இதனால் கடும் மன அழுத்ததுக்கு ஆளாகி வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று காலை  சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த எலும்பியல் மருத்துவர் கண்ணன் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

You may have missed