கங்கனாவை விளாசிய  ஜெயா பச்சனுக்கு  குவியும் பாராட்டுகள்..

கங்கனாவை விளாசிய  ஜெயா பச்சனுக்கு  குவியும் பாராட்டுகள்..

’’இந்தி சினிமா உலகில் போதைப்பொருள் பழக்கம் சர்வ சாதாரணமாக உள்ளது. பாலிவுட்டில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நுழைந்தால், ஏராளமான ’’ஏ-கிரேட்’’ நட்சத்திரங்கள் கம்பி எண்ண வேண்டியதிருக்கும்’’ என நடிகை கங்கனா ரணாவத் கூறி இருந்தார்.

இதனைக் கண்டித்து மாநிலங்களவையில் நடிகையும், சமாஜ்வாதி கட்சி எம்.பி.யுமான ஜெயாபச்சன் குரல் எழுப்பினார்.

‘’5 லட்சம் பேருக்கு நேரடியாகவும், 50 லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் சினிமா உலகம்,  வேலை அளிக்கிறது. சினிமா மூலம் புகழும்,, பணமும் சம்பாதித்தோர், இந்த துறையைக் கேவலப்படுத்துவதை ஏற்க முடியாது. என்று அவர் கூறினார்.

ராஜ்யசபாவில் ஜெயாபச்சன் ஆற்றிய உரை, வலைத்தளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், இந்தி சினிமா பிரபலங்கள் பலரும்,ஜெயாபச்சனை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகிறார்கள்.

நான்கு முறை மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த நடிகை ஷபனா ஆஸ்மி அளித்துள்ள பேட்டியில் ’’ ஜெயாபச்சன், அவசியமான கருத்தைச் சரியான இடத்தில் சொல்லி உள்ளார். நாடாளுமன்றத்தில் இதனைக் கூறியதால், அவரது கருத்து கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.. பெருமைப்படுகிறேன், ஜெயாபச்சன்’’ என்று தெரிவித்துள்ளார்.

இந்தி சினிமா நட்சத்திரங்கள் டாப்சி பானு, தியா மிர்சா, சோனம் கபூர், ஜெனிலியா உள்ளிட்டோரும் ஜெயாபச்சனுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

-பா.பாரதி.