அன்புக்கு எதிராக அணி சேரும் நட்சத்திரங்கள்…

சென்னை,

யக்குனர் மற்றும் கதாநாயகன் சசிகுமாரின் உறவினர் நேற்று தற்கொலை செய்துகொண்டார். இது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அவரது தற்கொலைக்கு பிரபல பைனான்சியர் அன்புசெழியன் காரணம் என அவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டு விசாரணையில் தெரிய வந்தது. இதையறிந்த பைனான்சியர் அன்புசெழியன் தலைமறைவானார்.

அவர் ஆளுங்கட்சியின் அரவணைப்பில் மறைந்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக வளசரவாக்கம் போலீசார் கூறியுள்ளனர்.

பைனான்சியர் அன்புசெழியன் மிரட்டல்  காரணமாக பிரபல இயக்குனர் மணிரத்தினத்தின் தம்பி ஜீவி, நடிகர் அஜீத் மிரட்டப்பட்டது  உள்பட பலர் அவரின் மிரட்டலுக்கு ஆளாகி உள்ளது.

இந்நிலையில், பைனான்சியர் அன்பு செழியன்னிடம் வட்டிக்கு பணம் வாங்கி மனஉளைச்சலுக்கு ஆளான நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வந்துள்ளது.

இந்த கூட்டம் கருப்பு நடிகர்,  தலைமையில் நடப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.