சென்னை: கொரோனா பொதுமுடக்கம் காரணமாக நிறுத்தப்பட்ட புறநகர் ரயில்சேவையை மீண்டும் தொடங்குகள் என மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் நடவடிக்கை  மற்றும் பொதுமுடக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் தமிழகத்தில் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. பின்னர், பொது முடக்கத்தில் கொடுக்கப்பட்ட தளர்வுகள் காரணமாக தமிழகத்தில்  சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, மெட்ரோ ரயில் சேவையும் நடைபெற்று வருகிறது. தற்போது ஓரளவுக்கு மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி உள்ளதால்,  சென்னையில் புறநகர் ரயில்களை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தது வருகின்றனர். புறநகர் ரயில் இயக்கம் இல்லாததால் மக்கள் பேருந்துகளை மட்டுமே நம்பி இருக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் பேருந்துகளில் கூட்ட நெரிசலும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் சென்னையில்  புறநகர் ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலுக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அதில், கடிதத்தில்,  புறநகர் ரயில் சேவையை தொடங்க வலியுறுத்தி ஏற்கனவே தமிழக அரசு சார்பில் அக்டோபர் 2-ஆம் தேதி கடிதம் எழுதப்பட்டது என்பதை நினைவூட்டியும், சென்னையில் புறநகர் ரயில் சேவையை தொடங்குமாறு தெற்கு ரயில்வேக்கு உத்தரவிட வேண்டும், என்றும் புறநகர் ரயில்சேவை பொதுமக்களுக்கும், மாநிலத்தின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் உதவும் என்றும் தெரிவித்துள்ளார்.