ஆரம்பமானது விஜய் 60!

1

 

தெறி படத்துக்கு அடுத்ததாக விஜய்யின் 60ம் படம், பரதன் இயக்கத்தில் கீர்த்திசுரேஷ் உட்பட பலர் நடிக்க கடந்த  ஏப்ரல் பத்தாம்தேதி தொடக்கவிழா நடந்தது. இரண்டு நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடந்த நிலையில்,  குடும்பத்தோடு இலண்டன் கிளம்பிவிட்டார் விஜய்.

கடந்தவாரம் சென்னை திரும்பிய விஜய், புதுப்பட படப்பிடிப்பை தொடரலாம் என சொல்ல..  நேற்று தொடங்கிவிட்டது.

சென்னை பெரம்பூர் பின்னிமில்லில் பெரியஅளவில் செட் போட்டு படப்பிடிப்பு ஆரம்பித்திருக்கிறது. சுமார் இருபத்தைந்து நாட்கள் நடக்கவிருக்கும் இந்தப்படப்பிடிப்பில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் மட்டுமே எடுக்கப்படுமாம். .

அவரது அறிமுகப்பாடல் மற்றும் ஒரு சண்டைக்காட்சி ஆகியனவற்றைப் படமாக்கத் திட்டமாம். பிறகு  சில நாட்கள் இடைவெளிக்குப் பிறகு நடக்கவிருக்கும் படப்பிடிப்பில் நாயகி கீர்த்திசுரேஷ் கலந்துகொளவாராம்.

நான்கு மாதங்களுக்குள் மொத்தப்படப்பிடிப்பையும் முடித்துவிடுவார்கள் என்றும் தீபாவளிக்கு முன்னதாக படம் ரிலீஸ் என்றும் சொல்கிறார்கள்.