பாகிஸ்தான் உறவை வலுப்படுத்தும் பணி தொடக்கம்!! டொனால்டு டிரம்ப் டுவிட்

வாஷிங்டன்:

‘‘பாகிஸ்தானுடனான உறவை மேலும் வலுப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது’’ என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த கைட்லான் கோல்மன், இவரது கனடா கணவர் ஜோஷவ் பாயில் ஆகியோர் தங்கள் 3 குழந்தைகளை, ஹக்கானி தீவிரவாத இயக்கத்திடம் இருந்து பாகிஸ்தான் ராணுவத்தினர் மீட்டனர். இவர்கள் 2012ம் ஆண்டில் கடத்தப்பட்டனர். தீவிர்வாதிகளின் பிடியில் இருந்தபோது தான் இந்த தம்பதிக்கு 3 குழந்தைகளும் பிறந்தனர்.

இவர்கள் மீட்கப்பட்டதை தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுகையில், ‘‘ பாகிஸ்தான் நாட்டுடனும், அந்நாட்டு தலைவர்களுடனும் மேலும் வலுவான உறவை வளர்க்கும் பணி தொடங்கியுள்ளது. பாகிஸ்தானின் பல முனை ஒத்துழைப்புக்கு நன்றி’’ என்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதேபோல் அமெரிக்காவின் துணை அதிபரான மைக்பென்சும் தம்பதியை விடுவிக்க பாகிஸ்தான் மேற்கெ £ண்ட நடவடிக்கையை பாராட்டியுள்ளார். மேலும், அவர் கூறுகையில், ‘‘சர்வதேச அளவிலான டிரம்பின் நிர்வாகத்தில் முக்கிய சாதனைகளை நிகழ்த்த பாகிஸ்தான் முன்வந்துள்ளது.

இதன் மூலம் அதிபர் டிரம்ப் சர்வதேச அளவில் பல சாதனைகளை புரிந்து வருகிறார். டிரம்பின் அழைப்பை ஏற்று தீவிராவாத அமைப்புகளுக்கு எதிராக போராட பாகிஸ்தான் முன்வந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக தீவிரவாதிகள் பிடியில் பிணை கைதிகளாக இருந்த அமெரிக்காவை சேர்ந்த குடும்பத்தை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளது’’ என்றார்.

இதை தொடர்ந்து அமெரிக்க பாதுகாப்பு துறை செயலாளர் ஜிம் மத்திஸ் மற்றும் ரெக்ஸ் தில்லர்சன் ஆகியோர் விரைவில் பாகிஸ்தான் செல்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் தெற்காசியா மற்றும் ஆப்கன் மீதான கொள்கைகள் குறித்து டிரம்ப் அறிவித்தபோது பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கையை விடுத்திருந்தார். தீவிரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறது. இது தொடர்ந்தால் தேவையான நடவடிக்கைகள் எ டுக்கப்படும் என்று அவர் எச்சரித்திருந்தார்.

இந்த எச்சரிக்கையை தொடர்ந்தே தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட தம்பதியை மீட்க பாகிஸ்தான் ராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி