20ந்தேதி திருவாரூரில் தொடங்குகிறார்: ஸ்டாலின் தேர்தல் சுற்றுப்பயண விவரம்….

சென்னை:

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர்களை ஆதரித்து, திமுக தலைவர் ஸ்டாலின் வரும் 20ந்தேதி திருவாரூரில் தனது தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, திமுக, காங்கிரஸ் கட்சி தலைமையில்  மெகா
கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது.  40 நாடாளுமன்ற தொகுதிகளில் 20 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கும் 20 தொகுதிகளில் திமுகவும் போட்டியிடுகிறது.

ஏற்கனவே தொகுதிகள் மற்றும் போட்டியிடும்  வேட்பாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், திமுக தலைமையிலான  ‘ மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் வரும் 20ந்தேதி தனது முதல்கட்ட தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

வரும் 20-ம் தேதி திருவாரூரில் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் பயணம் மேற்கொள்கிறார். ஏப்ரல் 4ந்தேதி விழுப்புரத்தில் தனத தேர்தல் பிரசாரத்தை  முடிக்கிறார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Loksabah election2019, stalin, Stalin's election tour deatils, TN Bypoll 2019
-=-