மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட பிரதமர் மோடி வற்புறுத்தல்

புதுடெல்லி:

த்திய மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் என டெல்லியில் நடைபெற்று வரும் மாநில முதல்வர்கள் மாநாட்டில் மோடி வேண்டுகோள் விடுத்தார்.

அனைத்து மாநில முதல்வர்கள் கலந்துகொள்ளும் முதல்வர்கள் மாநாடு 10 ஆண்டுகளுக்கு பிறகு  இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் 17 மூத்த மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இவர்களுடன் அனைத்து மாநில முதல்வர்களும் கலந்து கொண்டனர்.

முதல்வர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி
                        முதல்வர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி

மாநாட்டில் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி திட்டங்கள் பற்றி விவாதிக்கப்படுகிறது. தமிழகத்தின்  சார்பில் நிதிஅமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூட்டம் தாமதமாக வந்து கூட்டத்தில் கலந்து கொண்டார். உ.பி முதல்வர் அகிலேஷ் யாதவ், கர்நாடக முதல்- மந்திரி சித்தராமையா ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.

மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:-

நாட்டில் மாநில முதல்வர்களும், மத்தியஅமைச்சர்களும்  சந்தித்துக்கொள்ளும் வாய்ப்புகள் மிக குறைவு.  இது தவிர்க்கப்பட வேண்டும்.  மத்திய அரசும் மாநில அரசுகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே நாட்டில் வளர்ச்சி திட்டங்களை  நிறைவேற்ற முடியும். கடந்த ஆண்டைவிட  இந்த  ஆண்டு மாநிலங்களுக்கு கூடுதலாக 21 சதவீத நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு பிரதமர் பேசினார்.

கார்ட்டூன் கேலரி